ஜாகர்த்தா, டிசம்பர் 30 – ஜாவா கடல் பகுதியில் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கியதில் இதுவரை 46 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவுவரை 40 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மீண்டும் மீட்புக் குழுவினர் இன்று ஆறு உடல்களை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்புப்பணியில் சிரமம் இருப்பதால் சோனார் எனும் கருவியை பயன்படுத்துவதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இக்கருவி தான் ஜாவா கடல் பகுதியில் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கியதை கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இக்கருவியின் மூலம் கடலுக்கு அடியில் சென்று சோதனை செய்வதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் மீட்புக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.