Home நாடு நாளை முதல் ரோன்95, ரோன்97 பெட்ரோல் லிட்டருக்கு 35 காசும், டீசல் லிட்டருக்கு 30 காசும்...

நாளை முதல் ரோன்95, ரோன்97 பெட்ரோல் லிட்டருக்கு 35 காசும், டீசல் லிட்டருக்கு 30 காசும் குறையும்!

508
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 31 – வாகன உரிமையாளர்களுக்கு பிறக்கின்ற புத்தாண்டு இனிப்பான செய்தியோடு பிறக்கின்றது. எப்போதும் பெட்ரோல் விலை உயர்வு என்ற கசப்பான, எரிச்சலான செய்திகளையே கேட்டு வந்த நாம், அண்மையக் காலங்களில் முதன் முறையாக பெட்ரோட் விலை குறைக்கப்படும் என்ற ஆச்சரியமான, இனிப்பான செய்தியைக் கேட்கத் தொடங்கியுள்ளோம்.

petrol-pump

ரோன்95, ரோன் 97 ரக பெட்ரோல் லிட்டருக்கு 35 காசுகள் விலை குறைவாக நாளை முதல் விற்கப்படும். டீசல் லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்படும்.

#TamilSchoolmychoice

இந்த விலைக் குறைப்பைத் தொடர்ந்து, ரோன்95 பெட்ரோல் இனி லிட்டருக்கு 1 ரிங்கிட் 91 காசாகவும், ரோன்97 பெட்ரோல் இனி லிட்டருக்கு 2 ரிங்கிட் 11 காசாகவும், விற்பனை செய்யப்படும்.

டீசலின் விலை இனி லிட்டருக்கு 1 ரிங்கிட் 93 காசாக இருந்து வரும். இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் உள்நாட்டு வாணிப, கூட்டுறவுக் கழகங்கள், பயனீட்டாளர் துறைக்கான அமைச்சு இந்த விவரங்களைத் தெரிவித்தது.

hassan-malaek
ஹாசான் மாலேக்

விலைக் குறைப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சந்தை விலை நிலவரங்களையும், நாணயப் பரிமாற்ற விகிதங்களையும் அடுத்து வரும் மாதங்களில் தமது அமைச்சு கண்காணித்து வரும் என்று உள்துறை வாணிப, பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாசான் மாலேக் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் முதற்கொண்டு எரி பொருளுக்கான எல்லா வகை நிவாரண உதவித் தொகைகளும் ரத்து செய்யப் படுவதாகவும், இனி கச்சா எண்ணெய்யின் உலக சந்தை விலைக்கேற்ப உள்நாட்டிலும் பெட்ரோல், டீசலின் விலைகள் நிர்ணயம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

அண்மையக் காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து கொண்டே வருகின்றது என்பதே உள்நாட்டிலும் விலைக் குறைப்பிற்கான காரணமாகும்.