Home உலகம் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் ஐநா தீர்மானம் தோல்வி!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் ஐநா தீர்மானம் தோல்வி!

734
0
SHARE
Ad

pale-MMAP-mdஜெனிவா, ஜனவரி 2 – பாலஸ்தீனத்தை, இஸ்ரேலில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கும், வரைவு (Draft) தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் கூட்டத்தில் தோல்வியடைந்தது.

5 நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த வரைவு தீர்மானத்துக்கு ஆதரவாக 8 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஏற்பட்ட போரில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று அரபு நாடுகள் சார்பில் ஐ.நா.வில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் வரைவு தீர்மானத்துக்கு ஆதரவாக அர்ஜென்டினா, சாட், சிலி, சீனா, பிரான்ஸ், ஜோர்தான், லக்சம்போர்க், ரஷ்யா ஆகிய 8 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

பிரிட்டன், நைஜீரியா, தென் கொரியா, ருவாண்டா, லிதுவேனியா போன்ற நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தங்களுக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

இதனால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது. இந்த வரைவு தீர்மானம், இஸ்ரேல், பாலஸ்தீனம் தனித் தனி நாடுகளாக இருப்பது, அதற்கேற்ற எல்லைகளை வரையறுப்பது, இரு நாட்டு மக்களும் எந்த பிரச்னையும் இல்லாமல் சுதந்திரமாக இருப்பது ஆகியவை குறித்த பொதுவான கருத்துகளை உள்ளடங்கியதாக இருந்தது.

இந்த வரைவு தீர்மானத்தின்படி 2017-ம் ஆண்டிற்குள் பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக விலகிக் கொள்வது உள்ளிட்ட காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.