ஆவாரை இலை வற்றச்செய்தல் குணத்தை உடையது. குளிர்ச்சியூட்ட கூடியது. ஆவாரைப்பூ உடற்சூட்டையும், உடல் எரிச்சலையும் போக்கக்கூடியது.
ஆவாரைவேர் ஆஸ்துமா மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாகும். ஆவாரையைப் பொதுவாக சர்க்கரை நோய்க்குத் துணை மருந்தாகவும், கண்ணோய்களுக்கும்,
ஆவாரை பூ நரம்பை சுருக்கும் தன்மையுடையது. விதைகள் காம உணர்வைத் தூண்டக் கூடியது. தோலின் துர்நாற்றத்தைப் போக்க வல்லது.
ஆவாரம் பூக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோய்க்கே உரித்தான மலச்சிக்கலையும் ஆவாரம் பூ குணப்படுத்தும்.
வயிற்றுப் பூச்சிகளை வேரறுக்க வல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. எவ்வித வீக்கத்தையும் கரைக்கக் கூடியது. நுண்கிருமிகளைப் போக்க வல்லது.
ஆவாரம் பூ, இலை இவை இரண்டையும் சேர்த்து உலர்த்தி பொடியாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலுக்கு தேய்த்துக் குளிக்க உடல் துர்நாற்றம் போகும். தோலும் மென்மையும் பளபளப்பும் பெறும்.