Home கலை உலகம் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ இரண்டாவது முன்னோட்டம் வெளியானது!

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ இரண்டாவது முன்னோட்டம் வெளியானது!

549
0
SHARE
Ad

yennai arinthalசென்னை, ஜனவரி 2 – அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கிவரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜீத்திற்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்திருக்கிறார்கள்.

ஏ.ம்.ரத்னம் தயாரிப்பில், டான் மெகதூர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். மேலும் விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முன்னோட்ட காட்சிகளை சென்ற வாரம் வெளியிடுவதாக கூறி கடைசி நேரத்தில் இந்த வாரத்துக்கு மாற்றினார்கள்.

#TamilSchoolmychoice

தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியானது. இப்படத்தின் முன்னோட்டத்தை கீழே காணலாம்.