Home அவசியம் படிக்க வேண்டியவை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் “ஆதாமும் ஆப்பிள்களும்” படத்தில் நடிக்க மலேசியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் “ஆதாமும் ஆப்பிள்களும்” படத்தில் நடிக்க மலேசியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு

456
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 2 – பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் எஸ்.கே. ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் “ஆதாமும் ஆப்பிள்களும்” என்ற தமிழ்ப் படத்தில் நடிப்பதற்கு மலேசிய நடிகர்கள் – நடிகைகள் தேவைப்படுவதாகவும், விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ மற்றும் ஸ்ரீகாந்த் நடித்த “ஏப்ரல் மாதத்தில்” படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டான்லி இந்த புதிய படத்தை எழுதி, இயக்குகின்றார். இதன் படப்பிடிப்பு தமிழகத்திலும், மலேசியாவிலும் நடைபெறவிருக்கின்றது.

Adam Apple advt

#TamilSchoolmychoice

மலேசியாவில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ள காட்சிகளில் நடிப்பதற்காகத்தான், மலேசியக் கலைஞர்கள் தேவைப்படுகின்றார்கள்.

கீழ்க்காணும் பிரிவுகளில் மலேசியக் கலைஞர்கள் தேவைப்படுகின்றார்கள்:-

பெண்கள் – (இந்தியர்/சீனர்/மலாய்க்காரர்)

18க்கும் 28க்கும் இடைப்பட்ட வயது

பெண்கள் (இந்தியர் மட்டும்)

35 முதல் 45 வரை இடைப்பட்ட வயது

ஆண்கள் (இந்தியர்/சீனர்/மலாய்க்காரர்)

18 முதல் 45 வரை இடைப்பட்ட வயது

ஆண் குழந்தை (இந்தியர் மட்டும்)

4 முதல் 6 வயது வரை

ஆர்வமுடையவர்கள் தங்களின் முழு விவரங்களையும், தங்களின் கடந்த கால நடிப்பு சான்றுகளையும் கீழ்க்காணும் இணைய முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தாங்கள் ஏற்கனவே நடித்த குறும்படங்களையோ, அல்லது நடிப்புக் காட்சிகளையோ காணொளி மூலம் அனுப்ப விரும்புபவர்கள் முதலில் அவற்றை யூடியூப் (You tube) இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்து விட்டு அதன் பின்னர் அதன் இணையத் தொடர்பை தங்களின் விவரங்களோடு கீழ்க்காணும் இணைய முகவரிக்கு அனுப்பலாம்:

armskaa.casting@gmail.com

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள் 20 ஜனவரி 2015.