Home இந்தியா கிரிக்கெட்: உலகக் கோப்பை 2015-ன் இந்திய அணி இன்று அறிவிப்பு!

கிரிக்கெட்: உலகக் கோப்பை 2015-ன் இந்திய அணி இன்று அறிவிப்பு!

603
0
SHARE
Ad

indian teamபெங்களூரு, ஜனவரி 6 – உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணித் தேர்வு இன்று நடைபெறவுள்ளது. டோணி தலைமையிலான இந்த அணியில் யார் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு விறுவிறுப்பாகியுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதில் ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் போன்ற மூத்த வீரர்கள் இடம் பெறவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 15 பேர் கொண்ட இறுதி அணி இன்று தேர்வாகவுள்ளது. மும்பையில் இத்தேர்வு நடைபெறுகிறது.
சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இந்த 15 வீரர்களையும் தேர்வு செய்து அறிவிக்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதில் யாரெல்லாம் இடம் பெறக் கூடும் என்ற யூகங்கள் பறந்து வருகின்றன. இது குறித்து ஒன்இந்தியா பத்திரிகை உத்தேச அணியை வெளியிட்டுள்ளது. விராத் கோஹ்லி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே,

சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, முரளி விஜய், எம்.எஸ்.டோணி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், இஷாந்த் சர்மா, புவனேஸ் குமார், முகம்மது சமி, உமேஷ் யாதவ். ஆர். அஸ்வின் ஆகியோர் இடம் பெறுவார்கள் என ‘ஒன்இந்தியா’ நாளிதழ் வெளியிட்டுள்ளது.