Home கலை உலகம் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய விஜய் – சிவகார்த்திகேயன்!

குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய விஜய் – சிவகார்த்திகேயன்!

584
0
SHARE
Ad

collage_31சென்னை, ஜனவரி 7 – உயிருக்குப் போராடும் ஒரு வயது குழந்தையின் சிகிச்சைக்காக நடிகர் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் நிதியுதவி செய்துள்ளனர்.

பாலா என்ற குழந்தைக்கு எழும்பு சம்பந்தமான நோய் இருப்பதாகவும், அதை சரி செய்ய சிகிச்சைக்கு ரூ20. லட்சம் தேவைப்படுவதாகவும், புகைப்படம் மற்றும் முகவரியுடன் செய்தி பரவலாக சமுக வளைதளங்களில் பரவப்பட்டது.

முகப்புத்தகத்தில் ‘குழந்தை பாலாவுக்கு உதவுங்கள்’ (Help Baby Bala ) என்ற பெயரில் இணையப்பக்கம் தொடங்கப்பட்டு செய்தியும் பகிரப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

டுவிட்டரில் செய்தி வெளியிட்ட போது நடிகர் சிவகார்த்திகேயன் தான் முதலில் டுவிட் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் டுவீட் செய்துள்ளார்கள். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.

நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தினைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் மூலமாக இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்தும் நிதியுதவியும் வரத் துவங்கியுள்ளது. இதுவரை 4லட்சம் ரூபாய் வரைக்கும் நிதிசேர்ந்துள்ளதாம். என் குழந்தைக்கு பணம் என்பதையும் தாண்டி பிராத்தனை அவசியம்.

அனைவரும் பிராத்தனை செய்யுங்கள் என கேட்டுகொண்டுள்ளார் குழந்தை பாலாவின் தந்தை முருகன். நீங்களூம் விரும்பினால் உங்களது உதவிகளை அனுப்ப விபரங்கள் இந்த பக்கத்தில் தரபட்டுள்ளன.