வாஷிங்டன், ஜனவரி 7 – தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானுக்கு நற்சான்று தரவில்லை என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளில்
திருப்தி அடைந்து அமெரிக்கா நற்சான்றிதழ் அளித்ததாகவும், 532 மில்லியன் டாலர் நிதி உதவிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்பதல் வழங்கியதாகவும், தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”பாகிஸ்தானுக்கு தீவிரவாத ஒழிப்பில் நிதி உதவி செய்வதற்காக நற்சான்று எதுவும் கோரப்படவில்லை. 2013-ஆம் ஆண்டுக்கு பின்னர் நிதி எதுவும் வழங்கப்படவும் இல்லை.
மேலும், பாகிஸ்தானுக்கு தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக புதிதாக நிதி வழங்குவதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எந்த வேண்டுகோளையும் பதிவு செய்யவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.