Home வாழ் நலம் சிறுநீரக கோளாறுகளை தடுக்கும் பரங்கிக்காய்!

சிறுநீரக கோளாறுகளை தடுக்கும் பரங்கிக்காய்!

1410
0
SHARE
Ad

pumpkin,ஜனவரி 7 – பூசணிக்காய் ஓர் நல்ல உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனினும் அதனுள் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை இங்கு பார்ப்போம். பொதுவாக பூசணிக்காயைப் பரங்கிக்காய் என்று சொல்வது வழக்கம்.

இதற்கு சர்க்கரைப் பூசணி, சர்க்கரைப் பறங்கி என்று வேறு பெயர்களும் உண்டு. இது சமைத்து உண்ணும் போது சர்க்கரை சேர்த்து சமைத்தது போல இனிமை உடையதாக இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.

பரங்கிக்காயின் மேல்தோல் பச்சையாகவும் பழுத்த உடன் மஞ்சள் நிறத்தோடு கூடிய சிவப்பு நிறத்தை உடையதாகவும் உட்பகுதி மஞ்சள் நிறமான சதைப் பகுதி உள்ளதாகவும் இருக்கும். காய் மிகப் பெரிய உருண்டை வடிவமாகவும் இருக்கும்.

#TamilSchoolmychoice

yellow pumkin 3-500x500உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. தீக்காயங்களுக்கு மேற்பூச்சாக இதை அரைத்து தடவினால் தீக்காயங்கள் குணமாகும். வீக்கங்களின் மேல் பறங்கிச் சதையை பற்றாகப் போட வீக்கம் கரையும்.

கொப்புளங்கள் விரைவில் ஆறும். பறங்கிக்காயின் விதைகள் சிறுநீரைப் பெருக்கும் தன்மை உடையது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றவல்லது. குறிப்பாக வயிற்று புழுவை வெளியேற்ற வல்லது.

Pumpkin-Patch-பறங்கிக்காயின் விதையில் துத்தநாகச் சத்து இருப்பதாலும் அது வீக்கத்தை கரைக்க கூடியதாக இருப்பதாலும் ஆண்களின் சிறுநீரக கோளாறுகளையும் தடுப்பதற்கும் குணப் படுத்துவதற்கும் சிறுநீரகம் சரிவர இயங்குவதற்கும் இது மருந்தாக பயன்படுகிறது.

மேலும் பரங்கிக்காயின் விதைகளில் ஸ்டெரால் அமிலக் கொழுப்பு ஆகிய வேதிப் பொருள்களும் அடங்கியுள்ளது. இது புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது.