Home தொழில் நுட்பம் ‘வாட்ஸ் அப்’-ல் ஸ்கைப் வழி வாய்ஸ் கால் வசதி அறிமுகமாகிறது!

‘வாட்ஸ் அப்’-ல் ஸ்கைப் வழி வாய்ஸ் கால் வசதி அறிமுகமாகிறது!

604
0
SHARE
Ad

skype-whatsapp-wp7கோலாலம்பூர், ஜனவரி 8 – வாட்ஸ் அப்-ல் ‘வாய்ஸ் கால்’ (Voice Call) எனும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தும் வசதி பற்றி பத்திரிக்கைகள், அவ்வப்போது பல்வேறு ஆருடங்களை வெளியிட்டு வந்த நிலையில், புதிய செய்தி ஒன்று ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது.

அதாவது, வாட்ஸ் அப் மூலமாக ‘ஸ்கைப்’ (Skype) செயலியை இயக்கி வாய்ஸ் கால் மேற்கொள்ளலாம் என்பதாகும். இது தொடர்பாக ‘மேக்டெக்ப்ளாக்’ (Maktechblog) எனும் தொழில்நுட்ப இதழ், வாட்ஸ் அப்பின் ‘ஸ்க்ரீன்ஷாட்'(Screen Shot) பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்படுவதாவது:- “2014-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் வாட்ஸ் அப், வாய்ஸ் கால் வசதியை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், அது நிகழவில்லை”.

#TamilSchoolmychoice

“தற்போதைய சூழலில், இந்தாண்டின் முதல் காலாண்டில், வாட்ஸ் அப் அந்த வசதியை வெளியிட பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது.”

“இதில் கூடுதல் சிறப்பாக, ‘கால் வயா ஸ்கைப்’ (Call via Skype), ‘கால் ஹோல்ட்’ (Call Hold), ‘கால் மியூட்’ (Call Mute), ‘கால் பேக்’ (Call Back) போன்ற வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

தற்சமயம் சுமார் 700 மில்லியன் பயனர்களைத் கொண்டுள்ள வாட்ஸ் அப்,  வாய்ஸ் கால் வசதியையும் அறிமுகப்படுத்தினால், அதனைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை வியக்கத் தக்க அளவில் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.