Home இந்தியா சுனந்தா கொலை வழக்கு: என்னை சிக்கவைக்க போலீஸ் முயற்சி – சசிதரூர் குற்றச்சாட்டு

சுனந்தா கொலை வழக்கு: என்னை சிக்கவைக்க போலீஸ் முயற்சி – சசிதரூர் குற்றச்சாட்டு

600
0
SHARE
Ad

sasi-taroorபுதுடெல்லி, ஜனவரி 8 – சுனந்தாவை நானும் என்னுடைய வீட்டில் வேலை செய்பவரும் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி என்னுடைய வீட்டில் வேலை செய்தவரை போலீசார் அடித்து மிரட்டினர் என்று சசிதரூர் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி டெல்லி போலீஸ் கமிஷனருக்கு சசிதரூர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சுனந்தா மரணமடைந்தது தொடர்பான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம்.

ஆனால், சில போலீஸ் அதிகாரிகள் இவ்வாறு அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதுபோன்று மிரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் சசிதரூர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சசிதரூர் போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சுனந்தா புஷ்கர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஷி தெரிவித்தார்.