அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளிக்கு அனுப்பிய கெப்லர் விண்கலம், அதி நவீன டெலஸ்கோப் உதவியுன் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து வருகின்றது.
இந்நிலையில் கெப்லர், விண்வெளியில் 8 புதிய கிரகங்களை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஹார்வர்ட் ஸ்மித் சோனியன் மைய நிபுணர் கில்லர்மோ டோரஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆய்வுகளின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் இரண்டில், பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய சூழல் நிலவுவதாக தெரியவருகின்றது. தற்சமயம், அவற்றுக்கு கெப்லர் – 438பி மற்றும் கெப்லர்–442 பி என பெயரிடப்பட்டுள்ளன.
மேலும், இந்த கிரகங்களில் சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் ஆவி நிலையில் இருப்பதால், 97 சதவீதம் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.