Home உலகம் விமான விபத்துகளைத் தவிர்க்க புதிய திட்டங்கள் – அமெரிக்கா உறுதி!

விமான விபத்துகளைத் தவிர்க்க புதிய திட்டங்கள் – அமெரிக்கா உறுதி!

490
0
SHARE
Ad

airasia_planeவாஷிங்டன், ஜனவரி 9 – 2014-ம் ஆண்டு தொடர் விமான விபத்துகள் ஏற்பட்டதால், உலக நாடுகள் தங்கள் நாட்டு விமான பாதுகாப்பை உறுதிபடுத்த பலகட்ட முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

அவற்றுள் அமெரிக்கா, புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்காக அடுத்த 10 ஆண்டுகளில் 135 மில்லியன் டாலர்கள் செலவு செய்ய திட்டமிட்டமிட்டுள்ளது.

அமெரிக்க விமான நிறுவனங்களில் விபத்து என்பது அரிதான ஒன்று. கடந்த 2009-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 12-ம் தேதி பினாக்கிள் ஏர்லைன்சிற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பயணிகள் உயிரிழந்தனர்.

#TamilSchoolmychoice

இந்த விபத்திற்குப் பிறகு அங்கு விமான பாதுகாப்பு வசதிகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, தற்போது பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

அதன் முதற்கட்டமாக தொழில்நுட்பங்களை இயக்க விமானிகளுக்கான பயிற்சி முதல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது வரை தனித் தனியாக இருந்த துறைகள் ஒன்றிணைக்கப்பட இருக்கிறது.

காக்பிட்டில் ஒரு மேற்பார்வையாளரை நியமிப்பது, ஊழியர்களை ஊக்குவிப்பது, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தால் அவற்றைக் கையாள பல வழிகளிலும் விரைந்து செயலாற்றுவது என பல முக்கிய அம்சங்கள் இதில் செயற்படுத்தப்பட இருக்கின்றன.

இத்திட்டங்களுக்கான அடிப்படை தேவைகள், அடுத்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாதுகாப்பு திட்டத்தின்படி விமான விபத்துகள் தவிர்க்கப்பட்டு பல பில்லியன் டாலர்கள் மிச்சமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.