Home உலகம் இலங்கை அதிபர் தேர்தல் : தோல்வியை ஒப்புகொண்டார் ராஜபக்சே!

இலங்கை அதிபர் தேர்தல் : தோல்வியை ஒப்புகொண்டார் ராஜபக்சே!

612
0
SHARE
Ad

rajapaksa_in_russia1கொழும்பு, ஜனவரி 9 – இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ராஜபக்சே அறிவித்துள்ளர். அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் பதவி விலகுவதாக அதிபர் ராஜபக்சே பேட்டி அளித்தார். மகிந்தா ராஜபக்சே அதிபரின் அதிகாரப் பூர்வ இல்லத்தில் இருந்தும் வெளியேறினார்.

தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிரான எதிர்ப்பு வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 61.14 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளதார்கள். போர் முடிந்த பின்னர் அதிக அளவிலான வாக்குப் பதிவு யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பிலும் மிக அதிகமான வாக்களிப்புக்கள் நடைபெற்றுள்ளன. மகிந்தவின் செல்வாக்குப் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் எதிர்பாராத அளவிற்குக் குறைவடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

மகிந்தவின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் கூட வாக்களிப்பு வீதத்தில் பத்துவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேவேளை மகிந்த ராஜபக்சே கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்டங்களில் குறைந்த வாக்குவீதங்களே கிடைத்துள்ளன.

rajapaksaராஜபக்சே தோல்வியடைந்த மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் 70-லிருந்து 80 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சே வெற்றிபெற்ற மாவட்டங்களில் தபால் மூல வாக்குப் பதிவுகள் அதிகமாகவும்,

தோல்வியடைந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைவாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இலங்கையிலிருந்து வெளியாகின்றன.

மகிந்தாவிற்குப் பதிலாக மைத்திரியை மாற்றுவதால் மாற்றங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை எனினும், மகிந்தவிற்கு எதிரான உணர்வை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இறுதியில் வெற்றிபெறுவது யாராக இருந்தாலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குக் கிடைத்த பெரும் தோல்வியாகவே இத்தேர்தல் கருதப்படும்.

சற்று முன்னர்:

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சேவிற்கு 42.67 வீத வாக்குகளும் மைத்திரிபாலவிற்கு 56.16 வீத வாக்குகளும் கணிக்கப்பட்டுள்ளன.