Home உலகம் இலங்கை புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமித்தார் அதிபர் சிறிசேனா!

இலங்கை புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமித்தார் அதிபர் சிறிசேனா!

732
0
SHARE
Ad

ranil-maithiriகொழும்பு, ஜனவரி 12 – இலங்கையின் புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 இணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்ற மைத்ரிபால சிறிசேனா,

ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் முக்கியப் பதவிகளில் இருந்தவர்களை பதவி நீக்கம் செய்ததுடன் அந்த பதவிகளில் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளார்.

மேலும், இலங்கையில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 10 இணை அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அதன்படி, நிதி அமைச்சராக கலாநிதி ஹர்ஸ டி சில்வா, பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் சரத் பொன்சேகா, சுகாதார அமைச்சராக கலாநிதி ராஜித சேனாரத்ன, கல்வித் துறை அமைச்சராக கபீர் ஹாசிம்.

பொது அலுவல்கள் அமைச்சகத்தின் சஜித் பிரேமதாச, வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சராக ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர.

ஊடகம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சராக ஜெயந்த கருணாதிலக, மின்சாரம்,  எண்ணெய், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறையின் அமைச்சராக பாட்டலி சம்பிக்க ரணவக்க.

நீதி மற்றும் சட்ட அலுவல்கள் அமைச்சராக கலாநிதி விஜயதாச ராஜபக்ச, சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பைசர் முஸ்தபா, விமானத் துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், விவசாய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.

cabinet 878789dபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக கரு ஜயசூரியவும், கலாசார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரத் துறை அமைச்சராக ரோசி சேனநாயக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் மரம் வளர்ப்பு அமைச்சராக நவீன் திசாநாயக்க.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சராக அர்ஜுன ரணதுங்கவும், மீன்வளத் துறை அமைச்சராக ரிஷாத் பதியுதீன்தபால்.

தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக துமிந்த திஸாநாயக்கவும், தொழிலாளர் அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் துறை அமைச்சராக நிறோசன் பெரேராவும்.

நாடாளுமன்றம், உள்ளூராட்சி, தேசிய முகாமைத்துவ மீள்கட்டமைப்பு அமைச்சராக ஜோசப் மைக்கல் பெரேராவும், சமூக விவகாரங்கள் துறை அமைச்சராக லட்சுமன் கிரியல்லவும், கலாசார மற்றும் சமய விவகாரங்கள் துறை அமைச்சராக ஜோன் அமரதுங்கவும்.

மொழிகள், சமூக விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் சமாதான துறைக்கு எம்.ஏ.சுமந்திரனும், பாரம்பரிய, கைத்தொழில், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் திறன் அபிவிருத்தி துறைக்கு எம்.கே.டி.எச்.குணவர்தனவும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.