Home இந்தியா ரூ2-கோடி அபாரதம் கட்டியதால் வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிப்பு!

ரூ2-கோடி அபாரதம் கட்டியதால் வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிப்பு!

481
0
SHARE
Ad

jayalalitha1சென்னை, ஜனவரி 9 – ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வருமானவரித்துறை வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், நேற்று நடந்த விசாரணையில், வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை ரூ.2-கோடியை செலுத்தி விட்டதாக ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் 2 தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும்,

#TamilSchoolmychoice

இதனால் இத்துடன் வருமானவரித்துறை வழக்கை முடித்துக்கொள்ள சம்மதிப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது.