Home உலகம் விமானத்தின் அவசரகால கதவுகளை திறந்த 25 பயணிகள் கைது!

விமானத்தின் அவசரகால கதவுகளை திறந்த 25 பயணிகள் கைது!

478
0
SHARE
Ad

AIRPLANE-PTI-Lபெய்ஜிங், ஜனவரி 12 – விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதன் அவசரகால கதவுகளை திறந்த பயணிகள் 25 பேரை சீன நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விமானம் புறப்படுவதில் ஏற்பட்ட நீண்ட தாமதம் காரணமாக அதிருப்தி அடைந்ததாலேயே பயணிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

சனிக்கிழமையன்று சீனாவின் கன்மிங் நகரில் இருந்து பெய்ஜிங் புறப்பட இருந்த விமானம் ஒன்று கடும் பனிப்பொழிவு காரணமாக தாமதமானது. இதையடுத்து விமானத்தில் ஏறிய பயணிகள் இருக்கையிலேயே அமர்ந்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

#TamilSchoolmychoice

ஆனால் பலமணி நேரம் காத்திருந்தும் விமானம் புறப்படவில்லை. இதையடுத்து உடல்நல பிரச்சினைகளை எடுத்துக் கூறி தங்களை விமானத்தில் இருந்து வெளியேற அனுமதிக்குமாறு சில பயணிகள் கோரியுள்ளனர்.

அப்போது விமானம் ஓடுபாதைக்கு அருகே நின்றிருந்தது. அனுமதி கேட்ட பயணிகள் சிலர் திடீரென விமானத்தின் 3 அவசரகால கதவுகளைத் திறந்தனர். இதனால் வேறு வழியின்றி விமானத்தை மீண்டும் விமான நிலைய முனையத்திற்கே கொண்டு வந்து நிறுத்தினார் விமானி.

இதையடுத்து பயணிகள் 25 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். எனினும் துணை விமானியின் செயல்பாடு காரணமாக கவலையடைந்தே சில பயணிகள் இவ்வாறு நடந்து கொண்டதாக சீன ஊடகங்களிடம் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.