Home கலை உலகம் மீண்டும் இணைகிறது ‘மீகாமன்’ கூட்டணி!

மீண்டும் இணைகிறது ‘மீகாமன்’ கூட்டணி!

618
0
SHARE
Ad

meagam10சென்னை, ஜனவரி 12 – கடத்தல் மாஃபியா கும்பல், அதை கண்டுபிடிக்கும் போலீஸ் ஆர்யா, என படம் அதிரடியாக வெளியாகி அமையான வெற்றி படம் ‘மீகாமன்’ .

ஆர்யா , ஹன்சிகா நடிப்பில் உருவாகிய இப்படத்திற்கு கிடத்த வரவேற்பால் மீண்டும் இயக்குநர் மகிழ் திருமேனியும் , ஆர்யாவும் இன்னொரு படத்தில் இணைய உள்ளனர்.

’மீகாமன்’ படத்தின் படப்பிடிப்பின் போதே இன்னொரு அதிரடி கதையை ஆர்யாவிடம் கூறியுள்ளார் இயக்குநர் மகிழ்திருமேனி. அந்த கதை பிடித்துப்போக ஆர்யாவும் சம்மதம் சொல்லிவிட்டாராம்.

#TamilSchoolmychoice

தற்சமயம் ‘புறம்போக்கு’, ‘யட்சன்’, மற்றும் ‘ வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ படங்களில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா.  இந்த படங்களின் முடிவுக்கு பிறகு மகிழ்திருமேனி, ஆர்யா கூட்டணி மீண்டும் இணையும் என தெரிகிறது.

தன்னுடைய ‘தடையற தாக்க’ மற்றும் ‘மீகாமன்’ என இரு படங்களிலும் எதிர்பார்க்க முடியாத சண்டை காட்சிகளை வைத்த மகிழ் இந்த படத்திலும் அதே பாணியிலான சண்டை காட்சிகளை அமைப்பார் என நம்பப்படுகிறது.