Home உலகம் ஏர் ஆசியா QZ8501: கறுப்புப் பெட்டி கடலில் இருந்து மீட்கப்பட்டது!

ஏர் ஆசியா QZ8501: கறுப்புப் பெட்டி கடலில் இருந்து மீட்கப்பட்டது!

868
0
SHARE
Ad

Crashed AirAsia plane tail section liftedஜகார்த்தா, ஜனவரி 12 – கடந்த மாதம் விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியை (flight data recorder or Black box) இன்று ஜாவா கடலில் இருந்து முக்குளிப்பு வீரர்கள் மீட்டெடுத்தனர்.

இது குறித்து அந்நாட்டு தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவின் தலைவர் ஃபிரான்சிஸ்கஸ் பம்பாங் சோலிஸ்டியோ கூறுகையில், “கறுப்புப் பெட்டியை மீட்டுள்ளதாக தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகத்திடம் இருந்து இன்று காலை 7.11 மணியளவில் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தது. என்றாலும், விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவியை மீட்கப் போராடி வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 28 -ம் தேதி, இந்தோனேசியாவின் சுரபாயா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற ஏர் ஆசியா QZ8501 விமானம் ஜாவா கடலின் மேல் பறந்த போது விபத்திற்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 162 பயணிகளும் மரணமடைந்ததாக நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதுவரை 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.