Home கலை உலகம் இன்று 4 தமிழ்ப் படங்கள் திரையீடு காண்கின்றன

இன்று 4 தமிழ்ப் படங்கள் திரையீடு காண்கின்றன

855
0
SHARE
Ad

??????????????????சென்னை, டிசம்பர் 25 – ஏற்கனவே வெளிவந்த ‘லிங்கா’, பிசாசு படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், இன்று கிறிஸ்துமஸ் பெருநாள் மற்றும் ஆண்டு இறுதி விடுமுறைகள் காரணமாக 4 தமிழ்ப் படங்கள் திரையீடு காண்கின்றன.

மீகாமன், கயல், வெள்ளைக்கார துரை, கப்பல் ஆகிய நான்கு படங்களே அவை.

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் மீகாமன்.

#TamilSchoolmychoice

meagaamann poster

இயக்குநர் பிரபு சாலமனின் கைவண்ணத்தில் புதுமுகங்களின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘கயல்’. சுனாமியை மையப்படுத்திய படம் இது என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் வைபவ் நடிப்பில், கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் வெளிவரும் படம் ‘கப்பல்’. இயக்குநர் கார்த்திக் ஷங்கரின் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர்.

வெள்ளைக்காரதுரை, வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும், விக்ரம் பிரபுவின் அடுத்த படம். இயக்குநர் எழில் உருவாக்கத்தில் வெளிவரும் படம் இது. நகைச்சுவைக்கு சூரியும் இதில் இணைகின்றார்.

kappal-movie-poster

இந்த நான்கு படங்களில் மீகாமன், கயல், வெள்ளைக்காரதுரை ஆகிய மூன்று படங்களும் இன்று மலேசியாவிலும் ஏக காலத்தில் திரையீடு காண்கின்றன.

மீகாமன், கயல் ஆகிய இரண்டு படங்களின் முதல் நாள் திரை விமர்சனங்கள் இன்று செல்லியலில் இடம் பெறும்.