சென்னை- நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மீண்டும் திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். ‘தமிழன் என்று சொல்லடா’ என்ற தலைப்பில் தயாராகும் அப்படத்தில் அவரது மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு இப்படத்தை வெளியிட விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே அவரது மகன் சண்முக பாண்டியன் திரையுலகில் அறிமுகமானார். அவர் கதாநாயகனாக நடித்த ‘சகாப்தம்’ என்ற படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், தனது மகனை கைதூக்கிவிடும் வகையில், தனது மைத்துனர் சுதீஷ் மூலம் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ள விஜயகாந்த், அதில் முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளார்.
புதுமுக இயக்குநர் அருண் என்பவர் இயக்கும் அந்தப் புதிய படத்திற்குதான், ‘தமிழன் என்று சொல்லடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தப் படத்தை அரசியல் அதிரடி வசனங்களுடனும் புரட்சிகர பாடல்களுடனும் உருவாக்குமாறு இயக்குநரிடம் கூறியுள்ளாராம் விஜயகாந்த்.