Home Slider அடுத்த 2 மாதங்களுக்கு மார்க்கை பேஸ்புக்கில் பார்க்க முடியாது!

அடுத்த 2 மாதங்களுக்கு மார்க்கை பேஸ்புக்கில் பார்க்க முடியாது!

597
0
SHARE
Ad

mark_zuckசான் ஜோசே – பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் காதல் மனைவி பிரிசில்லாவிற்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால், தனது மனைவியையும், பிறக்க இருக்கும் குழந்தையையும் கவனிக்கும் நோக்கத்துடன் மார்க் சக்கர்பெர்க் பேஸ்புக்கில் இருந்து 2 மாதம் விடுப்பில் செல்ல இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “நானும், பிரிசில்லாவும் எங்கள் குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறோம். குழந்தைக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பொம்மைகளை தேர்வு செய்து வருகிறோம். மேலும் எனது மகளுக்காக நான் ஒரு தந்தையாக 2 மாத விடுப்பில் செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

beastமேலும் அவர், தனது மகளுக்காக தான் வாங்கி வைத்திருக்கும் பொருட்களுடன் தனது செல்ல நாய் (படம்) அமர்ந்திருப்பதை வெளியிட்டு, “அவனுக்கு புதியதாக ஏதோ ஒன்று நடப்பது புரிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.