Home நாடு அல்தான்துன்யா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!

அல்தான்துன்யா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!

551
0
SHARE
Ad

altantuyaகோலாலம்பூர், ஜனவரி 13 – மங்கோலிய அழகி அல்தான் துயா ஷாரிபு கொலை வழக்கில் அரசு தரப்பின் மேல் முறையீட்டின் விசாரணை நிறைந்து இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளான அதிரடிப்படை தலைமை கண்காணிப்பாளர் பெக்டர் அஸிலா ஹட்ரி, கார்ப்பரல் சைருல் அஷார் உமார் ஆகியோர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மீது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே உயர்நீதிமன்றம் அவர்களுக்கு விதித்திருந்த தண்டனைக்கு எதிராக கடந்த 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 23-ம் தேதி, மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவ்விருவரையும் விடுதலை செய்தது.

#TamilSchoolmychoice

எனினும், அத்தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நீதிபதி அரிபின் ஜக்கா ரியா தலைமையிலான 5 உறுப்பினர்கள் குழு விசாரணை செய்தது.

அதன் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.