Home இந்தியா சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் ஓரிரு நாளில் விசாரணை!

சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் ஓரிரு நாளில் விசாரணை!

593
0
SHARE
Ad

shashi_tharoor-21321புதுடெல்லி, ஜனவரி 13 – ‘‘சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக சசிதரூரிடம் இன்னும் ஓரிரு நாளில் விசாரணை நடத்தப்படலாம்’’ என டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் அவர் நேற்று அளித்த பேட்டியில்: “கடந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி அன்று சுனந்தா இறந்தபோது, அவர் தங்கியிருந்த விடுதியில் தடயங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை”.

“சசிதரூர் டெல்லி வந்துவிட்டார் என்பது எனக்கு தெரியும். எங்கள் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் சிறப்பு புலனாய்வு குழு அவரிடம் விசாரணை நடத்துவார்கள். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரரிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், விசாரணை நடத்துவோம்”.

#TamilSchoolmychoice

“சுனந்தா உடலில் விஷம் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக, அவரின் உடலின் உள் பாகங்கள், வெளிநாட்டு சோதனை மையத்துக்கு இன்னும் அனுப்பப்படவில்லை”.

“கொலை குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி தனது வீட்டு வேலைக்காரரை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக சசிதரூர் கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை அதிகாரிகளிடம் விசாரித்தேன். அவர் கூறியது போன்ற சம்பவம் நடைபெறவில்லை” என போலீஸ் கமிஷனர் பாஸி கூறினார்.