Home இந்தியா நான் மது குடிப்பதில்லை என்பதை நிரூபிக்கத் தயார் – விஜய்காந்த்

நான் மது குடிப்பதில்லை என்பதை நிரூபிக்கத் தயார் – விஜய்காந்த்

793
0
SHARE
Ad

vijayakanthரிஷிவந்தியம், ஜனவரி 13 – மது குடிக்கும் பழக்கம் தனக்கு இல்லை என்பதை நிரூபிக்கத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பகண்டை கூட்டுச் சாலை அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய்காந்த் தெரிவித்ததாவது:

“நான் மது குடிப்பதாக சமீபத்தில் பத்திரிகைகளும் சில அரசியல் கட்சியினரும் விமர்சனம் செய்தனர். ஆனால் நான் மது குடிப்பதே இல்லை. மது குடித்து என் ஈரல் வீணாகிவிட்டது என்றும் சில பத்திரிகைகளில் எழுதியுள்ளனர்”.

#TamilSchoolmychoice

“இதை அவர்களுக்கு யார் சொன்னது என்று கூறமுடியுமா? மேலும் நான் மது குடிப்பதில்லை என்பதை எந்த மருத்துவமனைக்கு வந்தும் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்”.

“திரைப்படங்களில் நடிக்கும்போது, கண்ணில் கிளீசரின் போடுவதால் எனக்கு கண் சிவந்து காணப்படும், அதைப் பார்த்து, விஜய்காந்த் குடித்து விட்டு நடிக்க வந்துவிட்டார் என்று எழுதத் தொடங்கிவிட்டனர்” என்று வன்மையாக கண்டித்து கூறியுள்ளார் விஜயகாந்த்.