கோலாலம்பூர், ஜனவரி 16 – சியாரியா நீதிமன்றத்தில் நேற்று எதிர்கட்சித் தலைவர் அன்வாரின் மகளும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வாருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
நூருல் இசாவிற்கும், தொழிலதிபர் ராஜா அகமட் ஷாரிர் இஸ்கண்டார் ராஜா சலிமுக்கும் இடையிலான திருமண உறவு விவாகரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நீதிபதி முகமட் அம்ரான் இரு தரப்பினரின் வாக்குமூலங்களையும் பரிசீலனை செய்து இந்த தீர்ப்பை வழங்கினார்.
திருமண சான்றிதழும், விவாகரத்திற்கான காரணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இரு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இருவருக்கும் உள்ளது என்றும் தெரிவித்தார்.
குழந்தைகளை வளர்ப்பதற்காக ராஜா அகமட் ஷாரிர் மாதம் தோறும் 1500 ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவித்தார்.