Home கலை உலகம் முதல் நாளே ‘ஐ’ படம் ரூ.30 கோடி வசூல் சாதனை!

முதல் நாளே ‘ஐ’ படம் ரூ.30 கோடி வசூல் சாதனை!

739
0
SHARE
Ad

i_movie_stillsசென்னை, ஜனவரி 17 – பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக 14-ஆம் தேதியன்று வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் சுமார் 30 கோடிகளை வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில் 22 கோடி ரூபாயும் உலக அளவில் 8 கோடி ரூபாய் அளவிற்கும் வசூலித்திருக்கும் எனச் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் ‘ஐ’ திரைப்படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கலாம் என்றும், இது கத்தி, லிங்கா ஆகிய திரைப்படங்கள் வசூலித்த தொகையை விடக் குறைவு என்கிறார்கள். அந்தத் திரைப்படங்களைக் காட்டிலும் ‘ஐ’ சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு முதல் நாள் வசூலில் குறைந்துள்ளதாம்.

#TamilSchoolmychoice

i-movieஆனால், தெலுங்கில் வெளியான ‘ஐ’ திரைப்படம் சில நேரடித் தெலுங்குப் படங்களின் வசூலை மிஞ்சும் அளவிற்கு சுமார் 7.50 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் இருந்ததாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் 2.5 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 2 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.  பொங்கல் விடுமுறை முடிவதற்குள்ளாக ‘ஐ’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்திற்கு சில மாறுபட்ட கருத்துக்கள் எதிர்மறையாக இருந்தாலும் பொங்கல் விடுமுறையில் குடும்பத்துடன் பலர் வந்து பார்க்கும் படமாக ‘ஐ’ இருப்பதால் அந்த வசூல் சாத்தியமே என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.