Home வாழ் நலம் புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி!

புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி!

1043
0
SHARE
Ad

radishesஜனவரி 17 – முள்ளங்கி நாம் சாதாரண உணவாக பயன்படுத்துகின்ற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறிந்ததே இல்லை.

முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு.

ஆயினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டவை. வெண்ணிற முள்ளங்கி யானையின் தந்தத்தைப் போன்றதாய் நீண்டும் பெரியதாய் காணப்படும்.

#TamilSchoolmychoice

சிறுமுள்ளங்கி கார்ப்புச் சுவையும், உஷ்ணத் தன்மையும் கொண்டு இருக்கும். இது உணவுக்கு சுவையூட்டும். குரலை செம்மைபடுத்தும்.

முள்ளங்கி வறட்சித் தன்மையும், குரு குணமும், வாயுத்தன்மையும் உடையது. இதை சமையலுக்கு உபயோகப்படுத்தும் முன்பு எண்ணெயிலிட்டு வதக்கிய பின் உபயோகப் படுத்தினால் மூல நோய்க்கு சிறந்தது.

mullangiவாதங்களைத் தணிக்கும். முதிர்ந்த முள்ளங்கியை விட இளம் முள்ளங்கியே நன்மை தருவதாக இருக்கும். முதிர்ந்த முள்ளங்கி கை, கால் வீக்கத்தை குணப்படுத்தும்.

தொண்டை கரகரப்பு, முதிர்ந்த முள்ளங்கி தொண்டை அடைப்பு, நாவின் சுவையின்மை, இருமல், கப நோய்கள் ஆகியவற்றைத் தணிக்கும். முள்ளங்கியின் பூ கப பித்தங்களைத் தணிக்கும். முள்ளங்கியில் புற்று நோயைத் தடுக்க வல்ல மருத்துவப் பொருட்கள் மலிந்துள்ளன.

பண்டைக் காலந்தொட்டு ஈரல் நோய்கள் வந்த போது அதைப் போக்குவதற்கும் மேலும் வராது தடுப்பதற்கும் முள்ளங்கியை உண்பது என்பது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. பல்வேறு மருத்துவ வேதிப்பொருட்கள் முள்ளங்கியில் அடங்கியுள்ளன. அவை பித்த நீரை ஒழுங்காக சுரக்க உதவுகின்றன.

இதனால் முள்ளங்கி ஆரோக்கியமான பித்தப்பைக்கும் ஈரலுக்கும் உதவுவதோடு செரிமானத்தையும் சீர்படுத்துகிறது. புதிய முள்ளங்கிக் கிழங்கில் மிகுதியான விட்டமின் சி சத்து அடங்கியுள்ளது.

mullankiமுள்ளங்கி கிழங்கை விட முள்ளங்கி இலையில் 6 மடங்கு விட்டமின் சி சத்து அடங்கியுள்ளது. மேலும் முள்ளங்கி கீரையில் மிகுதியான சுண்ணாம்புச் சத்தும் உள்ளது.

முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து கொடுப்பதால் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.  முள்ளங்கியைப் பயிர் செய்து இரண்டு மூன்று இலைகள் வந்தவுடன் அந்த இலைகளில் ஒரு பிடி அளவு எடுத்து,

2 முதல் 4 கிராம் அளவு சாதாரண சோற்று உப்பு சேர்த்து காலை, மாலை என 2 வேளையும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை என்கிற சிறுநீக மற்றும் பால்வினை நோய்களால் உண்டாகும் நீரடைப்பு நீங்கும்.