Home கலை உலகம் 29-ஆம் தேதி ‘என்னை அறிந்தால்’, ‘சண்டமாருதம்’ வெளியீடு!

29-ஆம் தேதி ‘என்னை அறிந்தால்’, ‘சண்டமாருதம்’ வெளியீடு!

568
0
SHARE
Ad

yennai arimthaalசென்னை, ஜனவரி 17 – அஜீத் நடிப்பில் கௌதம் இயக்கியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு போட்டியாக சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்டமாருதம்’ படமும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தையும் ஜனவரி 29 -ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் சண்டமாருதம் படத்தில் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

Sandamarutham-ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, டெல்லி கணேஷ், சிங்கம் புலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ‘சண்டமாருதம்’, வெங்கேடஷ்-சரத்குமார் இணைந்து பணியாற்றும் 4-வது படமாகும்.

இருவரும் ஏற்கெனவே, ‘மகாபிரபு’, ‘ஏய்’, ‘சாணக்யா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.