Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசிய பொருளாதாரம் குறித்த முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன!

மலேசிய பொருளாதாரம் குறித்த முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன!

722
0
SHARE
Ad

mh17-najib

கோலாலம்பூர், ஜனவரி 20 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மலேசியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைக் கையாளும் வகையில், புதிய செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை இன்று காலை தொலைக்காட்சி வழி நேரடியாக அறிவித்தார்.

பிரதமர் இன்று வெளியிட்ட அறிவிப்புகள், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் மூலம் அவர்கள், பாதிக்கப்பட்ட தங்கள் உடமைகளை சரி செய்துகொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

பிரதமர் தனது கட்டுப்பாட்டில் நிதித்துறையையும் வைத்திருப்பதால், நியாயமான வளர்ச்சி பெற்று வரும் மலேசியப் பொருளாதாரத்தின் எதிர்கால முன்னேற்றம் குறித்து மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை சரிவில் உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறையான காரணிகள் குறித்தும் ஆராய்வார் என்று கூறப்படுகின்றது.

சமீபத்தில் கச்சா எண்ணெய்யில் ஏற்பட்ட 60 சதவீத வீழ்ச்சி, மலேசியாவை மட்டுமல்லாமல் உலக அளவில் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி ஏற்கனவே பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்ணெய் விலை வீழ்ச்சியால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க, நிலையான மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் வழக்கத்தை விட அதிக செயல்திறன் மிக்க நடவடிக்கைகளுக்கு நாம் முற்பட்டால் மட்டுமே சீரிய வளர்ச்சிக்கான உத்தரவாதத்தை மக்களுக்கு அளிக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

எனவே இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பாதிப்பிற்குள்ளான பொருளாதார வளர்ச்சி மற்றும் ரிங்கெட் மதிப்பு வீழ்ச்சி குறித்த நடவடிக்கைகள் அதிக முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.