Home கலை உலகம் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் ’கயல்’ நாயகி ஆனந்தி!

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் ’கயல்’ நாயகி ஆனந்தி!

751
0
SHARE
Ad

anandhi gbசென்னை, ஜனவரி 20 – ‘டார்லிங்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப் படம் ’ திரிஷா இல்லன்ன நயன்தாரா’.

இப்படத்தில் ’கயல்’ படத்தின் நாயகி ஆனந்தி ஜோடியாக நடிக்கிறார். கேமியோ ஃபிலிம் நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

வருகிற 22-ஆம் தேதி படபிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. பல்வேறு இயக்குநரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த ஆதிக் ரவிசந்திரன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார்.

#TamilSchoolmychoice

‘அங்காடித் தெரு’, ’கோ’, போன்ற வெற்றிப் படங்களின் ஒளிபதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் இப்படத்தின் ஒளிபதிவாளராக பணியாற்ற உள்ளார்.

ரூபன் படத்தொகுப்பில், ஹேரிப் நடனம் அமைக்க, ஜி.வி.பிரகாஷ் இசையில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது “திரிஷா இல்லன்னா நயன்தாரா” படம்.  இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜெயகுமார் பேசும்போது,

“குறுகிய கால தயாரிப்பில் விரைவில் வரவிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும். மேலும் ஜி.வி.யின் ‘டார்லிங்’ வெற்றிப் பெற்றது இப்படத்தின் வெற்றியை மேலும் அதிகரிக்கும். வித்தியாசமான பரிமாணத்தில் இப்படம் அமையும்” என கூறியுள்ளார்.