Home உலகம் இந்தியாவை தாக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டம் – இங்கிலாந்து எச்சரிக்கை!

இந்தியாவை தாக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டம் – இங்கிலாந்து எச்சரிக்கை!

541
0
SHARE
Ad

indiaலண்டன், ஜனவரி 20  – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு இந்தியாவாக இருக்கலாம். எனவே மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 15-ம் தேதி, இந்தியா-இங்கிலாந்து பயங்கரவாத தடுப்புக் குழு செயல்பாட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியா மற்றும் இங்கிலாந்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இங்கிலாந்து அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் ஐஎஸ்ஐஎஸ் குறித்து தெரிவித்துள்ளனர்.

அந்தக் கூட்டத்தில், இந்திய அதிகாரிகள் பெஷாவர் தாக்குதலை சுட்டிக் காட்டி பாகிஸ்தான் அரசு அனைத்து தீவிரவாத இயக்கங்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இங்கிலாந்து அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

மேலும், இங்கிலாந்தில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல் இங்கிலாந்து அதிகாரிகள், இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினால் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்ததனர்.

இது தொடர்பாக இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- “பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்களைவிட, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் மீது இங்கிலாந்து அதிக கவனம் செலுத்தி வருகின்றது”.

“இங்கிலாந்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவி விடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு கவனமாக இருகின்றது. இந்தியாவை பொறுத்தவரை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.