Home நாடு பினாங்கில் 13 வகை உணவுகளை சமைக்க மலேசியர்களுக்கு மட்டுமே அனுமதி!

பினாங்கில் 13 வகை உணவுகளை சமைக்க மலேசியர்களுக்கு மட்டுமே அனுமதி!

636
0
SHARE
Ad

air-itam-asam-laksa-stallபினாங்கு, ஜனவரி 20 – பினாங்கில் மாநிலத்தில் மிகவும் பிரபலமான உணவு வகைகளான அசாம் லக்சா, சார் கொய்தியோ, கறிமீ, ஹோக்கியான் மீ, லோர்பாக், வாண்டான் மீ, பாசெம்போர், சீ சியோங் ஃபைன், மீ சோத் தோங், சார் கோய் காக், ஓ சியென், கொய் தியோ தங், நாசி லெமாக் ஆகிய 13 வகையான உணவுகளை அந்நியர்கள் சமைக்கக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

காரணம், இந்த உணவு வகைகளின் தனித்துவத்தையும், தரம் மற்றும் மணத்தைப் பாதுகாக்கவே இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியர்கள் மட்டுமே இந்த உணவு வகைகளை சமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னால் அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு இந்த பாரம்பரிய உணவு வகைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பினாங்கு மாநிலத்தில் இந்த 13 வகை உணவுகளையும் தயாரித்து விற்பனை செய்யும் 21 கடை உரிமையாளர்களுக்கு அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் கடந்த ஞாயிற்றுக்கிழமை உரிமை வழங்கினார்.