Home உலகம் ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராக இராணுவ நிபுணர்களை அனுப்ப சிங்கப்பூர் முடிவு!

ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராக இராணுவ நிபுணர்களை அனுப்ப சிங்கப்பூர் முடிவு!

549
0
SHARE
Ad

isisசிங்கப்பூர், ஜனவரி 21 –  ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினருக்கு உதவும் வகையில், தங்கள் நாட்டு இராணுவ நிபுணர் குழுவை அனுப்ப சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது.

குவைத் மற்றும் கத்தார் நாடுகளின் கூட்டுப்படையினரின் தலைமையகங்களுக்கு அவர்கள் இன்னும் சில மாதங்களில் அனுப்பி வைக்கப்பட்ட இருக்கின்றனர் என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் இங் எங் ஹென் கூறியதாவது:- “ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிரான கூட்டுப் படையினரின் நடவடிக்கைகளில் எங்களது பங்களிப்பை வழங்கும் வகையில், இராணுவ நிபுணர்களை அனுப்பி வைக்க உள்ளோம். உலகம் முழுவதும், பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது”.

#TamilSchoolmychoice

“உலகின் எந்த பாதுகாப்புப் படையாலும், ஒட்டுமொத்த மக்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்க முடியாது. எனினும், பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளில் மக்களை காக்க நாம் தொடர்ந்து ஈடுபட்டுதான் ஆகவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிரான நடவடிக்கைகளில் சிங்கப்பூர் ஈடுபடுவதன் காரணமாக பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் தர முடியாது” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே, பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நிகழ்த்தி வரும் போர் விமானங்களுக்கு, வானில் எரிபொருள் நிரப்பும் சரக்கு விமானங்களை அனுப்ப தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூர் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.