Home கலை உலகம் ‘ஐ’ சம்பளத்தில் பாதியை தானம் செய்த விக்ரம்!

‘ஐ’ சம்பளத்தில் பாதியை தானம் செய்த விக்ரம்!

601
0
SHARE
Ad

Vikram-reel-18சென்னை, ஜனவரி 21 – விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஐ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ஒரே வாரத்தில் ரூபாய்.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை செய்தது.

பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.  இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான தோற்றங்களில் வந்து அசத்தினார்.

குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமம் அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு விக்ரமை மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ‘ஐ’ படத்திற்காக வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளாராம் விக்ரம்.

இப்படத்தை தொடர்ந்து விக்ரம் விஜய் மில்டன் இயக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.