Home உலகம் 3 நாட்களில் 200 மில்லியன் டாலர்கள் வேண்டும் – ஜப்பானுக்கு ஐஎஸ்ஐஎஸ் நிர்பந்தம்!

3 நாட்களில் 200 மில்லியன் டாலர்கள் வேண்டும் – ஜப்பானுக்கு ஐஎஸ்ஐஎஸ் நிர்பந்தம்!

735
0
SHARE
Ad

islamic-stateகெய்ரோ, ஜனவரி 21 – ஜப்பான் பிணையக் கைதிகளை விடுவிக்க அந்நாடு 200 மில்லியன் டாலர்களை தர வேண்டும். இல்லையெனில் பிணைக் கைதிகளை கொன்று விடுவோம் என ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஈராக், சிரியா நாடுகளில் தொடர் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்  பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கெதிராக தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில், போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வண்ணம் ஐஎஸ்ஐஎஸ், பிணைக் கைதிகளின் தலைகளை துண்டித்து கொன்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த வகையில்,  ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கெதிராக போரிட நிதி உதவி அளித்த ஜப்பான் நாட்டிற்கு மிரட்டல் விடுக்கும் விதமாக கெஞ்சி கோட்டூ, ஹாருணா யுக்கவா என்ற 2 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.

200 மில்லியன் டாலர்கள்:

பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களின் காணொளியை வெளியிட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ், அவர்களை விடுவிக்க 200 மில்லியன் டாலர்கள் பணம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

3 நாட்களில் பணம் தரவில்லை என்றால் அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும், அவர்கள் அந்த காணொளியில் கூறியிருப்பதாவது:–

“எங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளுடன் ஜப்பான் சேர்ந்துள்ளதால், ஜப்பானியர்களை குறி வைத்துள்ளோம். எங்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல, நீங்கள் 100 மில்லியன் டாலர் கொடுத்துள்ளீர்கள்.”

“ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான முட்டாள் தனமான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இந்த ஜப்பானியர்கள் அவர்களது அரசை நிர்ப்பந்திக்க 72 மணிநேரம் தருகிறோம். அதற்குள் 200 மில்லியன் டாலர் தர வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இந்த காணொளி தொடர்பாக ஐப்பான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இது குறித்த தகவல்களை நாங்கள் அறிவோம். தற்போது நாங்கள் கூறுவதற்கு எதுவும் இல்லை’’ என்று கூறியுள்ளனர்.

சமீபத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு சென்றிருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் நாடுகளுக்கு உதவியாக 200 மில்லியன் டாலர்களை நிதி உதவியாக அளிப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.