டோக்கியோ, ஜனவரி 21 – ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள ஜப்பானியர்கள் இரண்டு பேரை மீட்பதற்காக, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தான் மேற்கொண்டிருந்த மத்திய கிழக்கு நாடுகளுக்களின் சுற்றுப்பயணத்தை தவிர்த்து நாடு திரும்பினார்.
இன்னும் 72 மணி நேரங்களில் 200 மில்லியன் அமெரிக்க டாலரை கொடுக்கவில்லை என்றால் இருவரையும் கொலை செய்துவிடுவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால், அவர் உடனடியாக இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஜெருசேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷின்ஸோ, “அவர்கள் இருவரையும் எந்த ஒரு சேதமும் இன்றி விடுதலை செய்யும்படி நான் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். அனைத்துலக சமுதாயம் தீவிரவாதத்திடம் கொடுக்கப்படவில்லை. நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.