Home இந்தியா நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? – கிரண் பேடிக்கு கெஜ்ரிவால் சவால்!

நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? – கிரண் பேடிக்கு கெஜ்ரிவால் சவால்!

552
0
SHARE
Ad

kajiriwal keran badiடெல்லி, ஜனவரி 21 – டெல்லியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றும் வகையில் பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண் பேடி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இவர் சில நாட்களுக்கு முன்பு தான் ஆம் ஆத்மியில் இருந்து பிரிந்து சென்று பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 49 நாளில் ஆட்சியை விட்டு விலகிய கெஜ்ரிவாலும் பாஜகவிற்கு பலத்த போட்டியாக விளங்குவார் என்று தெரிகிறது.

#TamilSchoolmychoice

இவ்வாறு டெல்லி தேர்தல் களம் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக தன்னுடன் நேருக்கு நேர் ஒரே மேடையில் பொது விவாதம் நடத்த தயாரா? என கிரண் பேடிக்கு கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

மேலும், மிக முக்கியமான முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய இரண்டு மணி நேர விவாதத்திற்கு தயாரா என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.