Home உலகம் ராஜபக்சேவிற்கு இலங்கை அரசு கடும் எச்சரிக்கை!

ராஜபக்சேவிற்கு இலங்கை அரசு கடும் எச்சரிக்கை!

478
0
SHARE
Ad

rajapakse2கொழும்பு, ஜனவரி 23 – ஊழல் தடுப்பு தொடர்பான பணிகளையே இலங்கை அரசு மேற்கொள்வதாகவும். இதில் ராஜபக்சேவை பழிவாங்கும் நோக்கத்தோடு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று மைத்ரிபால சிறிசேனா அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் இராஜபக்சே மீது சீனா வழங்கிய நிதியுதவியில் ஊழல், அரசு சார்புடைய நிதியத்தில் 13 ஆயிரம் கோடி ஊழல் என தொடர் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக இராஜபக்சே சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இலங்கை அரசு அவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து அந்நாட்டின் ஊடக அமைச்சர் கயந்தா கருணாத்தில்லாகே கூறுகையில், “இலங்கையின் புதிய அரசு ஊழல் தடுப்பு தொடர்பான பணிகளையே செய்து வருகின்றது.

இதன் மூலம் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட முறைகேடுகளை விசாரித்து நீதியை நிலைநாட்ட மட்டுமே எண்ணுகிறது. இதில் எந்தவொரு பழிவாங்கும் நோக்கமும் இல்லை. அவ்வாறு குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல”

“முன்னாள் அதிபர் அவருடைய கருத்தைத் தெரிவிக்க உரிமை உள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது”.

“இந்த நிலையில், தனது பணியை செய்யும் அரசின் மீது பழி கூறுவதை அனுமதிக்க முடியாது. தவறான குற்றச்சாட்டுகளை அரசு பொறுத்துக்கொள்ளாது” என்று அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை இராஜபக்சே பண்ணை வீட்டிலும், அதிபர் மாளிகையிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.