Home இந்தியா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் நடிகர் சோ.ராமசாமி!

தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் நடிகர் சோ.ராமசாமி!

522
0
SHARE
Ad

cho_ramaswamyசென்னை, ஜனவரி 23 – மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ.எஸ்.ராமசாமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோ.ராமசாமி கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.சில வாரங்களுக்கு முன்பு கூட அவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுத் வீடு திரும்பினார்.

மீண்டும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice