Home உலகம் புலம் பெயர்ந்தோருக்கான சிறந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு!

புலம் பெயர்ந்தோருக்கான சிறந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு!

584
0
SHARE
Ad

Singapore,சிங்கப்பூர், ஜனவரி 23 – ஆசிய அளவில் புலம்பெயர்ந்தோர் வாழ்வதற்கு சிறந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோலாலம்பூர் 16-வது இடம் பிடித்துள்ளது.

மனித வள மேம்பாடு தொடர்பான தகவல்களை அளித்து வரும் ECA International என்ற அமைப்பு, ஆசிய அளவில் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்வதற்கு சிறந்த வசதிகளை அளிக்கும் நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

ஆய்வுகளின் முடிவில் அந்த அமைப்பு சிறந்த நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சிங்கப்பூர், ஆசியா அளவிலும், உலக அளவிலும் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்வதற்கு சிறந்த வசதிகளை அளிக்கும் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தப் பட்டியலில் கடந்த முறை 17-வது இடம் பிடித்து இருந்த ஹாங்காங், இந்த முறை 33-வது இடம் பிடித்துள்ளது. மலேசியாவைப் பொருத்தவரை கோலாலம்பூர் ஆசிய அளவில் 16-வதி இடமும் உலக அளவில் 118-வதி இடமும் பிடித்துள்ளது.

ஜோகூர் பாருவிற்கு ஆசிய அளவில் 21-வது இடமும், உலக அளவில் 126 வது இடமும் கிடைத்துள்ளது. 2014-ம் ஆண்டிலும், கோலாலம்பூர் மற்றும்  ஜோகூர் பாரு இதே இடங்களை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Singapore Medium_Resolutionஇது தொடர்பாக இசிஏ இன்டர்நேசனல் நிறுவனத்தின் ஆசியப் பிரிவின் இயக்குனர் லீ குவனே கூறுகையில், “நல்ல காற்றோட்ட வசதி, சிறந்த கட்டுமான அமைப்புகள் மற்றும் சிறந்த மருத்துவ வசதிகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில், சிங்கப்பூர் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.”

“உலக அளவில் 450 இடங்களை ஆய்விற்கு உட்படுத்தி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கால நிலை, மருத்துவ வசதிகள், வீடுகள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவை இந்த ஆய்வில் முக்கிய காரணிகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது”.

“சிங்கப்பூரைத் தொடர்ந்து சிட்னி மற்றும் அடிலெய்ட் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பெங்களூரு, சென்னை,  டெல்லி ஆகிய நகரங்களும், சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.