Home உலகம் ஐநா தலையீட்டால் ஜமாத் உத் தவா அமைப்பிற்கு பாகிஸ்தானில் தடை!

ஐநா தலையீட்டால் ஜமாத் உத் தவா அமைப்பிற்கு பாகிஸ்தானில் தடை!

499
0
SHARE
Ad

Pakistan-Flag-720x480இஸ்லாமாபாத், ஜனவரி 23 – பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகும் ஜமாத் உத் தவா அமைப்பின் மீது பாராமுகமாக இருந்து வந்த பாகிஸ்தானை, உலக நாடுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கின.

அதன் காரணமாக பாகிஸ்தான் இந்த தடையை அறிவித்துள்ளது. கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களை இந்தியா அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.

#TamilSchoolmychoice

164 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் இதுவரை பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவி வந்தான்.

ஹபீஸ் சயீத் மீதான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை, இந்தியா பாகிஸ்தானிடம்  வழங்கிய போதும் பாகிஸ்தான் அரசு, சயீதை  இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்து விட்டது.

இதற்கிடையே, கடந்த டிசம்பர் 16-ம் தேதி, தலிபான் தீவிரவாதிகள் பெஷாவர் இராணுவப் பள்ளியில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகும், பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீத் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.

இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எதிர்ப்பு வலுவடைந்ததை தொடர்ந்து, ஹபீஸ் சயீத் அமைப்பிற்கு பாகிஸ்தான் தடை அறிவித்துள்ளது.

இதனை, அந்நாட்டின் வெளியுற செய்தி தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- “ஐ.நா. சபையின் வலியுறுத்தல் காரணமாக ஜமாத் உத் தவா அமைப்பை பாகிஸ்தான் தடை செய்துள்ளது”.

“அந்த அமைப்பின் வங்கிக்  கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஹபீஸ் சயீது வெளிநாடு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வரவுள்ள நிலையில், பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.