Home கலை உலகம் அத்வானி, அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ராம்தேவ் ஆகியோருக்கு பத்ம விருது – மத்திய அரசு அறிவிப்பு

அத்வானி, அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ராம்தேவ் ஆகியோருக்கு பத்ம விருது – மத்திய அரசு அறிவிப்பு

753
0
SHARE
Ad

rajini, amithap, athvaaniபுதுடெல்லி, ஜனவரி 23 – பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, நடிகர்கள் அமிதாபச்சன், ரஜினிகாந்த், யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொது வாழ்க்கையில் சாதனை புரிந்தவர்களுக்கு  மத்திய அரசு ஆண்டு தோறும் நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா, பத்ம பூஷன்,பத்ம விபூஷன்  போன்ற விருதுகளை வழங்கி   கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான (2015) பத்ம விபூஷன்  விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.  பாரத ரத்னாவுக்கு அடுத்தப் படியான விருதான பத்ம விபூஷண் விருதுக்கு முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோரும் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தற்போதைய தமிழ் நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைப் பெறப்போகிறார்.

மேலும் விருதை பெறுபவர்கள் விவரம் வருமாறு:- பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்,பாலிவுட் நடிகர் திலீப் குமார், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகர் சல்மான் கானின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான சலீம் கான், இயக்குனர் பிரசூன் ஜோஷி.

பேராசிரியர் டேவிட் ப்ராலி, ஹாக்கி அணி கேப்டன் சர்தரா சிங், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, செஸ் வீரர் சசிகிரண் கிருஷ்ணன், குத்துச்சண்டை வீரர் சுஷீல் குமார், அவரது பயிற்ச்சியாளர் சத்பால், பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய்.

செய்தியாளர்கள் ரஜத் சர்மா, ஸ்வபன் தாஸ்குப்தா, ஹரி சங்கர் வியாஸ், மறைந்த நடிகர் பிரான் ஆகியோரின் பெயர்களும் பத்ம விருதுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாடகி சுதா ரகுநாதன், இசையமைப்பாளர்கள் அனு மாலிக், இயக்குனர் ஜாஹ்னு பருவா, விஞ்ஞானிகள் அருணன், ஷிவ்குமார், எழுத்தாளர் மனோஜ் தாஸ் ஆகியோரும் பத்ம விருதுகள் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நடக்கும் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவர்களுக்கு இவ்விருதை வழங்க உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

பாரத ரத்னா விருது முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவர்களது பெயர்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மத்திய அமைச்சர் சபை அனுப்பி வைத்தது.

அதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்கினார். அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதாம் இருவருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவ்விருதை வழங்குவார்.