பெங்களூரு, ஜனவரி 24 – ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் முதற்கட்ட வாதம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. முன்னாள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், ”சுதாகரன் திருமணத்திற்கு சிவாஜி குடும்பம் செய்த செலவை கணக்கில் கொள்ளவில்லை.
லஞ்ச ஒழிப்புத்துறையும் ஜெயலலிதாவின் வருமானத்தை சரியாக மதிப்பீடு செய்யவில்லை. ஜெயலலிதா மீது ஆதாரமில்லாமல் பொய்யான வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடர்ந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும்” என வாதிட்டார். அவரது வாதத்தைக் பதிவு செய்த நீதிபதி குமாரசாமி,
மேல்முறையிட்டு மீதான விசாரணை மீண்டும் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவின் முதற்கட்ட வாதம் நிறைவு பெற்றுள்ளது.