Home உலகம் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு – ரணில் உறுதி!

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு – ரணில் உறுதி!

554
0
SHARE
Ad

கொழும்பு, ஜனவரி 25 – இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பங்கீடு வழங்க வழி வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதாகவும், விரைவில் இதனை செயல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே (படம்) தெரிவித்துள்ளார்.

Ranil Wickramasinghe

இது தொடர்பாக விக்ரமசிங்கே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“இலங்கையை பிரிக்காமல் செய்யப்படும் அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசிய கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், 13-வது சட்ட திருத்தத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட கால வரம்பிற்குள் இதனை செயல்படுத்த தொடர்ந்து அரசியல் கட்சிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அதனை விரைந்து செயல்படுத்தும் பட்சத்தில், அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்.”

“அதேபோல், இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை மீறல் தீர்மானத்திற்கு முன்னாள் அதிபர் இராஜபக்சேதான் முழு காரணம். அந்த விவகாரத்தை அவர் தவறாகக் கையாண்டதால், இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் சர்ச்சை எழுந்தது. இலங்கையில் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுடன் இராஜபக்சே தொடர்பான குற்றவியல் விசாரணையும் தொடங்கும். அதற்கான தீர்ப்பினை வழங்க இலங்கை நீதிமன்றங்களுக்கே உரிமை உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்களும், இந்தியாவும் நீண்ட காலமாக கூறிவந்த 13-வது சட்ட திருத்தம் தொடர்பான சாதகமான பதில்கள் தற்போது தான் இலங்கை அரசு வசமிடமிருந்து வரத் துவங்கி உள்ளன.