Home உலகம் இந்தியத் துணை அதிபர் அன்சாரி சவுதி மன்னருக்கு அனுதாபம் தெரிவித்தார்!

இந்தியத் துணை அதிபர் அன்சாரி சவுதி மன்னருக்கு அனுதாபம் தெரிவித்தார்!

638
0
SHARE
Ad

ரியாத், ஜனவரி 25 – காலமான சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மறைவுக்காக அனுதாபம் தெரிவிக்கவும், சவுதியின் புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சல்மான் அப்துல் அசிசுக்கு மரியாதை தெரிவிக்கவும் உலகம் எங்கிலும் இருந்த தலைவர்கள் சவுதி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

?????????????????????????????????????

இதன் தொடர்பில் நேற்று இந்தியாவின் துணை அதிபர் முகமட் ஹமிட் அன்சாரி ரியாத் வந்தடைந்தார். அவரை ரியாத் நகர ஆளுநர் (கவர்னர்) துர்கி அப்துல்லா அல் சவுத் விமான நிலையத்தில் வரவேற்றார்.

#TamilSchoolmychoice

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனது இந்திய வருகையை சுருக்கிக் கொண்டு சவுதி அரேபியா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படம்: EPA