Home உலகம் 2030-குள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து – பில் கேட்ஸ் நம்பிக்கை

2030-குள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து – பில் கேட்ஸ் நம்பிக்கை

708
0
SHARE
Ad

billgates

டாவோஸ், ஜனவரி 26 – எதிர் வரும் 2030-ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகள் கண்டறியப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டாவோஸில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் தொடர்பாக பில் கேட்ஸ் கூறுகையில்,

#TamilSchoolmychoice

வரும் 2030-ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகள் கண்டறியப்படும். எச்ஐவி தொற்று குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் அதிகமாகி உள்ளது. அதன் காரணமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக குறைந்து வருகின்றது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவத் துறையின் முன்னேற்றத்தினால்அதிகநாட்கள் வாழ்கின்றனர்.”

இனி வரும் காலத்தில் எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழித்துவிடும் மருந்துகள் கண்டறியப்படும். அவ்வாறு கண்டறியப்பட்டால்அடுத்த 15 ஆண்டுகளுக்குள் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையை 95 சதவீதம் குறைத்துவிடலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகள் கண்டறிவது தொடர்பான ஆய்வுகளுக்கு பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, பல மில்லியன் டாலர்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.