Home கலை உலகம் இந்தியாவின் பத்ம விருதுகள் அறிவிப்பு – அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷன் விருது!

இந்தியாவின் பத்ம விருதுகள் அறிவிப்பு – அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷன் விருது!

825
0
SHARE
Ad

amitabh-past-readxபுதுடில்லி, ஜனவரி 26 – இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் குடியரசு தினத்தன்று சமூக சேவை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், மருத்துவம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு 9 பத்ம விபூஷண், 20 பேருக்கு பத்ம பூஷண், 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது. இவர்களில் 17 பேர் பெண்கள். 17 பேர் வெளிநாட்டினர் மற்றும் 1 வெளிநாடு வாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பாஜக மூத்த தலைவர் அத்வானி, நடிகர் அமிதாப் பச்சன், தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் மலூர் ராமசாமி, நடிகர் திலீப் குமார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் வழங்கப்படவுள்ளன.

பாடகி சுதா ரகுநாதனுக்கு பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது.