Home உலகம் மன்னர்களில் உலக அளவில் அதிக வயது வாழ்பவர் ராணி எலிசபெத்!

மன்னர்களில் உலக அளவில் அதிக வயது வாழ்பவர் ராணி எலிசபெத்!

746
0
SHARE
Ad

elsabath raniலண்டன், ஜனவரி 26 – அனைத்துலக அளவில் மன்னர்களில் ராணி எலிசபெத் அதிக வயதில் வாழ்ந்து வருகிறார். உலக அளவில் வாழும் மன்னர்களில் 8 பேர் 80 முதல் 89 வயது வரை உயிருடன் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களில் இங்கிலாந்து ராணி எலிசபெத், தாய்லாந்து மன்னர் மற்றும் ஜப்பான் மன்னரும் அடங்குவர். இவர்களை விட வயது மூத்தவராக சவுதிஅரேபியா மன்னர் அப்துல்லா இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். அவரது வயது 90.

அதை தொடர்ந்து தற்போதுள்ள மன்னர்களில் ராணி எலிசபெத்தான் அதிக வயது உயிருடன் வாழ்கிறார். அவருக்கு வருகிற ஏப்ரல் மாதம் 89 வயது பிறக்கிறது.

#TamilSchoolmychoice

இவரை அடுத்து மற்ற 7 நாட்டு மன்னர்களும் வயது குறைந்தவர்கள் ஆவர். இங்கிலாந்து மன்னர் பரம்பரையில் அதிக வயது வரை வாழ்பவர்களில் ராணி எலிசபெத் 2–வது இடம் பிடித்துள்ளார். இவரது கொள்ளுப்பாட்டி ராணி விக்டோரியா அதிக வயது உயிருடன் வாழ்ந்தவர்களில் முதலிடம் வகிக்கிறார்.